search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா: வெங்கரா சட்டசபை இடைத்தேர்தல் - முஸ்லிம் லீக் வேட்பாளர் காதெர் வெற்றி
    X

    கேரளா: வெங்கரா சட்டசபை இடைத்தேர்தல் - முஸ்லிம் லீக் வேட்பாளர் காதெர் வெற்றி

    கேரள மாநிலம் வெங்கரா சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் காதெர் 65 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வெங்கரா சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதெர் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.

    இடதுசாரி முன்னணி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பஷீர் இரண்டாமிடத்தில் இருந்து வந்தார். இறுதி முடிவில் முஸ்லிம் லீக்கின் காதெர் 65,227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இடதுசாரி கூட்டணி வேட்பாளர் 41,917 வாக்குகாள் பெற்று இரண்டாமிடமும், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் 8648 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.

    பா.ஜ.க வேட்பாளர் 5728 வாக்குகள் பெற்று நான்காமிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக இதே வெங்கரா தொகுதி முஸ்லிம் லீக்கின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×