search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்ததால் பழைய வேனில் குடியிருக்கும் 4 குழந்தைகள்
    X

    வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்ததால் பழைய வேனில் குடியிருக்கும் 4 குழந்தைகள்

    கேரள மாநிலம் கோட்டயத்தில் வாடகைக்கு வீடு கொடுக்க யாரும் முன்வராததால் 4 குழந்தைகள் பாட்டியின் பராமரிப்பில் பழைய வேனுக்குள் வாழ்கிறார்கள்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் புன்னம் புழாவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). இவரது மனைவி குஞ்சுமோள் (34). இவர்களுக்கு 14 வயதில் பெண் குழந்தையும், 9, 6 மற்றும் 2 வயதில் 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி சந்தோஷ் (48) என்பரை கொன்று புதைத்தனர். இதனால் தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதனால் 4 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்தனர்.

    இந்நிலையில் குழந்தைகளின் பாட்டி தங்கம்மாள் (60) குழந்தைகளுக்கு ஆதரவு காட்ட முன் வந்தார். வாடகை வீட்டில் குடியிருந்த அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி உரிமையாளர் கூறினார். அதன்படி அவர்கள் வெறியேறினர். வேறு இடத்தில் வாடகைக்கு வீடு பார்த்தபோது கொலைகார தம்பதியின் குழந்தைகளுக்கு வீடு கொடுக்க யாரும் முன்வரவில்லை. மழை, வெயிலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருக்க இடமின்றி தவித்தனர்.

    இந்நிலையில் பாட்டி தங்கம்மாள் பழைய இரும்பு கடைக்கு சென்றார். அங்கு என்ஜின் இல்லாத பழைய வேனை ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கினார். அதனை குழந்தைகளின் பெற்றோர் அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பு நிறுத்தினார். அதில் 4 குழந்தைகளையும் தங்க வைத்தார். தங்கம்மாள் குழந்தைகளுடன் அதே காரில் வசித்து வருகிறார். வேனில் குளியல் அறை, படுக்கை அறை மற்றும் படிக்கும் அறை என இடங்களை மாற்றி அமைத்தார். இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்க சார்ஜ் லைட்டை பயன்படுத்தி வருகிறார்.

    பெற்றோரின் குற்றச் செயலால் குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.
    Next Story
    ×