search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நதிநீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் - கர்நாடக மந்திரி தகவல்
    X

    காவிரி நதிநீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் - கர்நாடக மந்திரி தகவல்

    காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
    பெங்களூரு:

    கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். எங்கும் நாங்கள் தோல்வி அடையவில்லை. சில குறைகள் இருக்கலாம். அதை சரிபடுத்திக்கொள்வோம்.

    ராஜண்ணா எம்.எல்.ஏ., காங்கிரஸ் திருடர்கள் கட்சி என்று கூறியுள்ளது பற்றி கேட்கிறீர்கள். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவரிடமே போய் கேளுங்கள்.

    காவிரி நதி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு கர்நாடகத்திற்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பசுக்களை பாதுகாக்க மாவட்டத்திற்கு ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அந்த உத்தரவை நாங்கள் அமல்படுத்துவோம்.

    ஆட்சி காலம் முடியும் முன்பே தேர்தல் வராது. எங்கள் அரசு பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். சிரா தொகுதியில் வீடு வீடாக பிரசாரம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு சிலர் குறுக்கீடு செய்துள்ளனர். எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இதை செய்துள்ளனர்.

    இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.
    Next Story
    ×