search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை: கனமழையால் ரன்வேயில் இருந்து விலகி சேற்றில் சிக்கிய விமானம் - 183 பேர் மீட்பு
    X

    மும்பை: கனமழையால் ரன்வேயில் இருந்து விலகி சேற்றில் சிக்கிய விமானம் - 183 பேர் மீட்பு

    மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கிய விமானம் ரன்வேயில் இருந்து விலகி சேற்றில் சிக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    மும்பை:

    மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கிய விமானம் ரன்வேயில் இருந்து விலகி சேற்றில் சிக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றன. இந்நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு வாரனாசியிலிருந்து நேற்றிரவு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்  ரன்வேயில் தரையிறங்கியது.

    கனமழை காரணமாக ரன்வே ஈரமாக இருந்ததால், விமானம் சற்று விலகி சேற்றில் சென்று சிக்கிக்கொண்டது. இதனால், விமானத்தில் இருந்த 183 பயணிகளும் பதற்றமடைந்தனர். உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

    இதனால், விமான நிலையத்தின் வழக்கமான நடவடிக்கைகள் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
    Next Story
    ×