search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்மி என்று உதட்டோடு அழைக்க வேண்டாம் - அம்மா என்று உள்ளன்போடு கூப்பிடுங்கள்: துணை ஜனாதிபதி அறிவுரை
    X

    மம்மி என்று உதட்டோடு அழைக்க வேண்டாம் - அம்மா என்று உள்ளன்போடு கூப்பிடுங்கள்: துணை ஜனாதிபதி அறிவுரை

    மம்மி என்று உதட்டோசையாக அழைக்காமல் நம்மை பெற்ற தாயை அம்மா என்று உள்ளன்போடு கூப்பிடுங்கள் என துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரபல கர்நாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு இன்று பங்கேற்று சிறப்பித்தார்.

    தற்போது நமது பெற்றோரை மம்மி, டாடி என்று ஆங்கிலத்தில் அழைக்க தொடங்கி விட்டோம். ஆனால், அம்மா மற்றும் உருது மொழியில் அம்மி என்று அழைப்பது நமது உள்ளத்தில் இருந்துவரும் சொற்களாகும். மம்மி என்ற சொல் வெறும் உதடுகளில் இருந்துவரும் வார்த்தையாக உள்ளது என தனது பேச்சினிடையே அவர் குறிப்பிட்டார்.

    பெற்ற தாயையும், தாய்நாட்டையும், பூர்வீக ஊரையும், தாய்மொழியையும் நாம் எப்போதும் மறந்து விட கூடாது என்று கூறி வந்துள்ளேன். அப்படி மறப்பவர்களை மனிதர்களாகவே கருத முடியாது. எனவே, எப்போதும் உங்களது தாய்மொழியில் பேசுங்கள். உங்கள் தாயின் கருவறையில் இருந்துவந்த மொழிக்கு மதிப்பும் மரியாதையும் அளியுங்கள். ஆங்கிலேயர்களிடம் ஆங்கில மொழியில் பேசுவதில் தவறேதும் இல்லை.

    மத்திய அரசில் முன்னர் மந்திரியாக பதவிவகித்த வேளையிலும் நமது தாய்மொழி மற்றும் தேசிய - பிராந்திய மொழிகளில் பேச வேண்டும் என வெங்கைய்யா நாயுடு வலியுறுத்தி வந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×