search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறு சீராய்வு மனு தள்ளுபடி ஆனதால் சசிகலா அதிர்ச்சி: சொத்துக்களை முடக்க திட்டம்
    X

    மறு சீராய்வு மனு தள்ளுபடி ஆனதால் சசிகலா அதிர்ச்சி: சொத்துக்களை முடக்க திட்டம்

    சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் அடுத்து அவரது சொத்துக்களை முடக்க வாய்ப்பு உள்ளது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து ஜெயில் அதிகாரிகள் மூலம் தகவல் அறிந்த சசிகலா அதிர்ச்சி அடைந்தார்.

    நேற்று இரவு அவர் சரியாக தூங்கவில்லை. இந்த தீர்ப்பை கேட்ட இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.


    சசிகலா உள்ளிட்ட 3 பேரும் தலா ரூ. 10 கோடி அபராதத் தொகையை செலுத்த வேண்டும். அப்படி செலுத்த வில்லை என்றால் அவர்களது சொத்துக்களை ஏலம் விட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்று பெங்களூருவை சேர்ந்த வக்கீல் ஒருவர் கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். அபராதத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை கர்நாடக அரசு இனிமேல் தொடங்கும். 3 பேரும் அபராதத் தொகையை செலுத்தி விட்டால் கூடுதல் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    அபராதத் தொகையை கட்ட வில்லை என்றால் அவர்களது சொத்துக்களை முடக்கி ஏலம் விட்டு அந்த தொகையை அபராதமாக வசூலிக்க சட்டத்தில் இடம் உண்டு.

    இதனால் அடுத்தக்கட்டமாக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரில் உள்ள சொத்துககளை முடக்கி ஏலம் விட கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×