search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரும் ‘காணவில்லை போஸ்டர் பரபரப்புகள்: மோடி, சோனியா, ராகுலை தொடர்ந்து சுஷ்மாவும் சிக்கினார்
    X

    தொடரும் ‘காணவில்லை' போஸ்டர் பரபரப்புகள்: மோடி, சோனியா, ராகுலை தொடர்ந்து சுஷ்மாவும் சிக்கினார்

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் விதிஷா தொகுதி எம்.பியான வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்ஜை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் விதிஷா தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சுஷ்மா சுவராஜ். இவர் வெளியுறவு துறை மந்திரியாகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், விதிஷா நகரம் முழுவதும், ’எங்கள் தொகுதி எம்.பி.யை காணவில்லை’ என்றும், ’காணாமல் போன எம்.பி.யை தேடி வருகிறோம்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் தொகுதியில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பற்றிய பட்டியலும் இடம்பெற்றுள்ளது.
     
    ’விதிஷாவில் உள்ள விவசாயிகள் செத்து மடிகிறார்கள், விவசாயிகள் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். வியாபாரிகள் வியாபாரம் செய்ய பயப்படுகின்றனர். இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று இருக்கின்றனர். தங்கள் தொகுதி எம்.பி.யை காணாது மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அவரை யாராவது எங்காவது பார்த்தால், விதிஷா மக்கள் அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்லுங்கள்’ என குறிப்பிட்டுள்ளது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.



    இதுகுறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் என்ன பயன் கிடைக்கும் என தெரியவில்லை. வெளியுறவு துறை மந்திரியான சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் நீண்ட பயணம் செய்வதில்லை. ஆனாலும், இப்போதும் கூட, அவர் போபால் வந்து மக்களை சந்தித்து விட்டு சென்றுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் பாராளுமன்ற தொகுதிகளில் ‘காணவில்லை’ போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×