search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது பீகார்: 41 பேர் பலி
    X

    பலத்த மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது பீகார்: 41 பேர் பலி

    பீகாரில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 41 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 65 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
    பாட்னா:

    வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பீகார், அசாம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது.

    பீகாரில் கனமழையால் 25 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஏராளமான ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பல இடங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது.

    பீகாரில் மழைக்கு 41 பேர் பலியாகி இருக்கிறார்கள். 65 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். மீட்பு பணிகளில் ராணுவ படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் படகில் சென்றும், விமானத்தில் சென்றும் மக்களை மீட்டு வருகிறார்கள். கனமழை, வெள்ளத்தில் ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    அசாமில் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 22 ஆயிரம் பேர் தவித்து வருகிறார்கள். வெள்ளத்தால் வடகிழக்கு மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி பலியான 6 பேர் உடல்களை ராணுவத்தினர் மீட்டனர். மீட்புப்பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் ஒருவர் மாயமாகிவிட்டார்.

    உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அதனால் வெளியேற முடியாமல் தவித்த கிராம மக்களை மீட்புக்குழுவினர் மீட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×