search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் அதிருப்தி எதிரொலி: சுதந்திரதின சிறப்புரையை 57 நிமிடத்தில் முடித்த மோடி
    X

    மக்கள் அதிருப்தி எதிரொலி: சுதந்திரதின சிறப்புரையை 57 நிமிடத்தில் முடித்த மோடி

    பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை மிக நீளமாக இருப்பதால் பேச்சின் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று தனது சுதந்திரதின சிறப்புரையை 57 நிமிடத்திற்குள் அவர் நிறைவு செய்தார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த மாதம் வானொலியில் உரை நிகழ்த்தியபோது தனது சுதந்திர உரை மிகவும் நீளமாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து 8,000 கடிதம் வந்ததால் பேசும் நேரத்தை குறைத்துக் கொள்வதாக வாக்களித்து இருந்தார்.

    அதன்படி இன்று பிரதமர் மோடி 57 நிமிடங்களில் தனது சுதந்திரதின உரையை முடித்துக் கொண்டார். கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் மிகச்சிறிய சுதந்திரதின உரை இதுவாகும். கடந்த ஆண்டு 96 நிமிடங்களும், 2015-ல் 86 நிமிடங்களும், 2014-ல் 65 நிமிடங்களும் பேசினார்.

    இதற்கு முன் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 10 முறை பேசியுள்ளார். அவை 50 நிமிடங்களுக்கு மேல் நீண்டது கிடையாது. 2005, 2006-ல் மட்டுமே 50 நிமிடம் பேசியுள்ளார். மற்ற நேரம் 32 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 30 முதல் 35 நிமிடங்கள் மட்டுமே பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×