search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானின் ஒவ்வொரு தோட்டாவுக்கும் இந்திய ராணுவம் 10 தோட்டாக்களை அனுப்பும்: நிர்மல்சிங்
    X

    பாகிஸ்தானின் ஒவ்வொரு தோட்டாவுக்கும் இந்திய ராணுவம் 10 தோட்டாக்களை அனுப்பும்: நிர்மல்சிங்

    பாகிஸ்தானின் ஒவ்வொரு தோட்டாவுக்கும் இந்திய ராணுவம் 10 தோட்டாக்களை அனுப்பும் என ஜம்மு-காஷ்மீர் துணை முதல்-மந்திரி நிர்மல்சிங் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியாவை சேர்ந்த 40 வயதான பெண்மணி உயிரிழந்தார்.



    இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் கூறுகையில், ‘பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலுக்கு அவர்கள் கடும் விளைவை சந்திப்பார்கள். பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு தோட்டாவுக்கு பதிலாக இந்திய ராணுவம் 10 தோட்டாக்களை திருப்பி அனுப்பும்.

    பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

    பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் வசிக்கும் படைவீரர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். ஆனால் நாம் அப்படி அல்ல. உரிய முறைப்படி விசாரணை நடத்த உத்தரவிட்டு வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×