search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்லாத நோட்டுக்களை எண்ண புதிய மெஷின் கொள்முதல்: ப.சிதம்பரம் கிண்டல்
    X

    செல்லாத நோட்டுக்களை எண்ண புதிய மெஷின் கொள்முதல்: ப.சிதம்பரம் கிண்டல்

    மத்திய அரசு செல்லாத நோட்டுக்களை எண்ண புதிய மெஷின் கொள்முதல் செய்வதாக ப.சிதம்பரம் கிண்டல் செய்தார்.

    புதுடெல்லி:

    கடந்த அண்டு நவம்பர் மாதம் பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பழைய நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டன.

    அந்த நோட்டுகள் தற்போது எண்ணப்பட்டு வருவதாகவும் அவற்றின் மொத்த எண்ணிக்கை தற்போது தெரியாது என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பாராளுமன்ற நிலைக் குழுவிடம் தெரிவித்தார். ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு மெஷின்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

    இது பற்றி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை எண்ணுவதற்காக அந்த அறிவிப்பு வெளியான 8 மாதங்களுக்கு பிறகு மெஷின்களை ரிசர்வ் வங்கி விலை கொடுத்து வாங்கியுள்ளது.


    செல்லாத நோட்டுகளை எண்ணுவதற்கு மெஷின்களை வாடகைக்கு எடுத்தாலே போதும் என்ற நிலையில் வாடகை என்ற வார்த்தையை ரிசர்வ் வங்கி கேள்விப்பட்டதில்லை போலும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×