search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2020-ம் ஆண்டு திட்டமிட்டபடி சூரியனை ஆய்வு செய்ய செயற்கைகோள்: இஸ்ரோ விஞ்ஞானி
    X

    2020-ம் ஆண்டு திட்டமிட்டபடி சூரியனை ஆய்வு செய்ய செயற்கைகோள்: இஸ்ரோ விஞ்ஞானி

    2020-ம் ஆண்டு திட்டமிட்டப்படி சூரியணை ஆய்வு செய்து செயற்கை கோள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக் குதிரையில் உள்ள பள்ளி ஆண்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் கே.சி.கருப்பணன், அந்தியூர் எம்.எல்.ஏராஜா கிருஷ்ணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானியும் முன்னாள் இஸ்ரோ தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை மழையின்மை உள்பட காரணங்களால் உணவு பொருட்கள் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படக்கூடும். அப்போது உணவு பற்றாக்குறை நிலவுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளது. இதனால் மண் இல்லாமல் பயிர் செய்ய முடியுமா? என்ற ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு திட்டமிட்டப்படி சூரியணை ஆய்வு செய்து செயற்கை கோள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாணவர்கள் குறைந்த எடையுள்ள செயற்கை கோளை தயாரித்தால் இஸ்ரோ மூலம் இலவசமாக விண்ணில் செலுத்தப்படும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வருடத்துக்கு ஒன்று அல்லது 2 செயற்கைகோள் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது ஆண்டுக்கு 12 செயற்கைகோள் அனுப்பப்படுகிறது. அதை 14 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
    Next Story
    ×