search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 52 அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 52 அடியாக சரிவு

    மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக நேற்று அதிகாலை முதல் மீண்டும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று 59 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 70 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கு மிக குறைவாக தண்ணீர் வரத்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று 53.34 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் ஒரு அடிக்கு மேல் சரிந்து 52.07 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. #tamilnews

    Next Story
    ×