search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
    X

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    குற்றலாம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கு 2-வது நாளாக நேற்றும் நீடித்தது.

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டியும், ஐந்தருவியில் பாறைகள் தெரியாத அளவிற்கு 5 கிளைகளை மறைத்த படியும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது நீரின் அழுத்தம் மற்றும் தண்ணீரில் அடித்து வரப்படும் சிறு, சிறு மரத்தடிகள், கற்கள் போன்றவற்றால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    பழைய குற்றாலம் மற்றும் புலியருவியில் மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை மெயினருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    Next Story
    ×