search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் வக்கீல்கள் முற்றுகை
    X

    கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் வக்கீல்கள் முற்றுகை

    கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    கும்மிடிப்பூண்டி:

    பொன்னேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணிபுரியும் 10-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி ரெயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் அருகே தினமும் தங்களது மோட்டார் சைக்கிள்களை விட்டு ரெயில் மூலம் பொன்னேரிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் பணி முடிந்து திரும்பியபோது அனைத்து வழக்கறிஞர்களின் மோட்டர் சைக்கிள்களிலும் டயர்களில் இருந்த காற்று பிடுங்கப்பட்டு பஞ்சர் ஆக்கப்பட்டு இருந்தது. மேலும் சில வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன.

    கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலைய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிள்களின் காற்றை பிடுங்கி பஞ்சர் ஆக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் மனுவும் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வக்கீல்களுடன் சமாதான பேச்சு நடத்தினர்.

    இதையடுத்து வக்கீல்கள் கலைந்து சென்றனர். இதனால் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×