search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் புதிய ஆதார் எண் பதிவு செய்யும் வசதி அறிமுகம்
    X

    அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் புதிய ஆதார் எண் பதிவு செய்யும் வசதி அறிமுகம்

    தபால் நிலையத்தில் புதிய ஆதார் எண் பதிவு செய்யும் வசதி, சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    சென்னை:

    மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஆதார் எண் பதிவு செய்யும் சேவையை இந்திய தபால் துறையானது, இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்புடன் (யு.ஐ.டி.ஏ.ஐ.) இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய சேவை சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் நேற்று தொடங்கப்பட்டது.

    மதுரை, திருச்சி, கோவை, நாகர்கோவில், நெல்லை, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், காஞ்சீபுரம், திருவள்ளூர், மற்றும் புதுச்சேரி தலைமை தபால் நிலையங்களில் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்திலுள்ள மேலும் 1,434 தபால் நிலையங்களுக்கு படிப்படியாக ஓரிரு மாதங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 70 தபால் நிலையங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை 14 ஆயிரத்து 756 திருத்தங்கள் நடைபெற்றுள்ளன.

    வங்கிகள், தொலைபேசி சேவை நிறுவனங்கள், தபால் நிலைய வங்கிகள், சமையல் எரிவாயு (கியாஸ்) வினியோகிப்பவர்கள் ஆகியோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயம் பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யவும், ரேஷன் அட்டை வாங்கவும் இப்போது ஆதார் எண் கட்டாயம் வேண்டும்.

    புதிதாக ஆதார் எண் பதிவு செய்ய வெகு சில இடங்களே இருந்தன. அங்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இனி பொதுமக்கள் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தங்களை தங்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களிலேயே செய்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.     
    Next Story
    ×