search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழவேற்காட்டில் பலத்த மழை: சாலைகள் துண்டிக்கப்பட்டதால் 5 கிராம மக்கள் படகில் பயணம்
    X

    பழவேற்காட்டில் பலத்த மழை: சாலைகள் துண்டிக்கப்பட்டதால் 5 கிராம மக்கள் படகில் பயணம்

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் பெய்த மழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்த தொடர் மழையினால் அப்பகுதி மக்கள் 16-வது நாளாக படகில் சென்று வருகின்றனர்.
    பொன்னேரி:

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் பெய்த மழையால் பொன்னேரி பகுதியில் உள்ள ஏரி. குளங்கள் நிரம்பின.

    நேற்று இடைவெளி விடாமல் தொடர்ந்து மழை பெய்ததால் பழவேற்காடு கடலில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    பழவேற்காடு ஏரி அருகே உள்ள சாட்டாங்குப்பம், பசியாவரம் எடமணி, எடமணி குப்பம் ரகமத் நகர் ஆகிய 5 கிராமங்களை சுற்றியுள்ள ஏரியில் நீர் அதிகமாக காணப்படுவதால் சாலைகள் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் அவசர தேவைக்கும் படகின் மூலம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பழவேற்காட்டிற்கு செல்கின்றனர்.

    படகில் செல்ல நபருக்கு 5 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது. தொடர் மழையினால் 16-வது நாளாக படகில் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×