search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் எஸ்டேட்டிலும் சோதனை
    X

    சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் எஸ்டேட்டிலும் சோதனை

    ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் அடுத்து அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    கோத்தகிரி:

    ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் அடுத்து அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் எஸ்டேட் உள்ளது. 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கர்சன் எஸ்டேட்டை சமீபத்தில் கிரீன் டீ எஸ்டேட் என்று பெயர் மாற்றம் செய்தார் சசிகலா.

    இங்கு சொகுசு பங்களா, டீ தொழிற்சாலை, ஹெலிபேடு உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை 3 வாகனங்களில் வந்த அதிகாரிகள் கர்சன் எஸ்டேட் என்ற கிரீன் டீ எஸ்டேட்டில் சோதனை நடத்தினர்.
    Next Story
    ×