search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்தில் சோதனை
    X

    போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்தில் சோதனை

    ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.
    சென்னை:

    சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாரில் உள்ள டிடிவி தினகரன் வீடு, தஞ்சை அருளானந்த நகரில் சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடு, அவர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டனையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை.  போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோடநாடு எஸ்டேட் பங்களாவில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்த மேலாளர் நடராஜனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×