search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    நீர்வரத்து குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.19 அடியாக குறைந்தது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு குறைந்தது. கடந்த 14-ந்தேதி அன்று 17 ஆயிரத்து 249 கன அடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று முன்தினம் விநாடிக்கு 5 ஆயிரத்து 474 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 599 கன அடியாக சரிந்தது. இன்று காலை மேலும் நீர்வரத்து குறைந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 159 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வருகிறது.

    அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் நேற்று 93.07 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.19 அடியாக குறைந்தது.
    Next Story
    ×