search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடப்பதை காணலாம்
    X
    ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடப்பதை காணலாம்

    சேலத்தில் பரவலாக மழை: ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன

    சேலம் மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால் ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் பாய்ந்தோடிய காட்டாற்று வெள்ளமானது சிறிய ஏரி, குளங்களை நிரப்பி வருகிறது. அதேவேளையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குட்டைபோல காட்சி அளித்தது.

    சேலத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வளாகத்தையும், அம்மா உணவகத்தை சுற்றிலும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. இதேபோல சேலம் ஜங்சனில் இருந்து பழைய சூரமங்கலம் செல்லும் சுரங்கப்பாதையில் மழைநீர் குட்டைபோல தேங்கியது.

    ஏற்காடு மலைப்பாதையில் பலத்த மழைக்கு சிறிய பாறைகள் முதல் ராட்சத பாறைகள் வரை ஆங்காங்கே உருண்டு விழுந்தன. ஏற்காடு அடிவாரத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 40 அடி பாலம் அருகே, நேற்று அதிகாலை மலைப்பாதையில் 100 அடி உயரத்தில் இருந்து சுமார் 50 டன் எடையுள்ள ராட்சத பாறை உருண்டு விழுந்தது.

    அந்த இடத்தில் ஏற்கனவே, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்ததால் போக்குவரத்துக்கு பெரிய அளவில் தடை ஏற்படவில்லை. ஆனாலும் வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ராட்சத பாறையை வெடிவைத்து அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஏற்காட்டில் பெய்த மழையால் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டிருந்தன.

    கடலூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வேப்பூரில் 107 மில்லி மீட்டர் மழை பெய்தது. கம்மாபுரத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

    Next Story
    ×