search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட போது எடுத்த படம்
    X
    ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட போது எடுத்த படம்

    நொய்யல் ஆறு நுரைக்கு சோப்பு தண்ணீரே காரணம்: அமைச்சர் கருப்பண்ணன்

    வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு மற்றும் கழிவுகளாலேயே நொய்யல் ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    அமைச்சர் செல்லூர் ராஜூ சில மாதங்களுக்கு முன்பு ஆற்று தண்ணீர் ஆவியாதலை தடுக்க தெர்மாகோலை மிதக்க விட்டார். ஆனால் தெர்மா கோல் தண்ணீரில் மிதந்த படி சிறிதுநேரத்தில் கரைக்கு வந்தது.

    அமைச்சரின் இந்த புதிய யோசனை சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலை தளங்களிலும் கேலி- கிண்டலுடன் கருத்துகள் பரிமாறப்பட்டது.

    இதேபோல் அமைச்சர் கருப்பண்ணனின் பேச்சால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ள நீருடன் சாயக் கழிவுகளும் சென்றது. இதனால் ஆற்று தண்ணீரில் நுரை பொங்கி வழிந்தது.

    இதை பார்த்த சமூக ஆர்வலர்கள், சாயக் கழிவுகளால் நுரை வந்து நொய்யல் ஆறு மாசுபடுகிறது. இதை தடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட சாய சலவை பட்டறை சங்க நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நொய்யல் ஆற்றில் அதிகளவில் நுரை வந்தது. இது சாயக் கழிவுகளால் ஏற்பட்டது என்ற புகார் எழுந்தது.



    ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு மற்றும் கழிவுகளாலேயே நுரை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×