search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
    X

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப் பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவு, பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஊசி போடும் அறை, பிரசவ வார்டு, ஆய்வகம், புறநோயாளிகள் பிரிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்நோயாளிகள் பிரிவு, காய்ச்சல் உள்நேயாளிகள் பிரிவு, மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, வெளி மற்றும் உள் நோயாளிகள் பதிவு செய்யும் இடம், அறுவைசிகிச்சைக்குபின் கவனிப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு மேற்கொண்டு நோயாளி களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

    மேலும் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிப்பதோடு தேவையான மருந்து மாத்திரைகளையும் தயார் நிலையில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப் பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (மருத் துவ பணிகள்) டாக்டர்.சரஸ்வதி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டர்.ரமேஷ் குமார், பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் டாக்டர்.டி.சாந்தி, பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.ஏ. செந்தில்குமார் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×