search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் கார் மீது கல்வீச்சு: குஜராத் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- நாராயணசாமி
    X

    ராகுல் கார் மீது கல்வீச்சு: குஜராத் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- நாராயணசாமி

    ராகுல் காந்தி கார் மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு குஜராத் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குஜராத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மீது பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் அவருடைய வாகனத்தை கற்களால் தாக்கி உள்ளனர்.

    ராகுல்காந்தி இசட் பிளஸ் பாதுகாப்பு கொண்டவர். இந்த தாக்குதலில் அவருடைய பாதுகாப்பாளர்களும் காயம் அடைந்துள்ளனர்.

    குஜராத் பா.ஜ.க.வினரால் ராகுல்காந்தி மீது கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநிலத்தில் முதல்- மந்திரியும், அமைச்சர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். மாநிலத்தின் முதல்வர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதே போல் தாக்குதல் நடத்திவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ஜ.க.வினர் எதிர்க் கட்சியினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறார்கள். அதேபோல் சி.பி.ஐ. மற்றும் வருமான வரி துறையினரை ஏவி விட்டு அடக்குமுறை கொண்டு வருவதும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதும் தெளிவாக தெரிகிறது.

    இவ்வாறு நாராயணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

    இதே போல் ராகுல் காந்தி கார் மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×