search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமராவதி அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு
    X

    அமராவதி அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு

    உடுமலைபேட்டை வட்டம் அமராவதி அணையில் பொதுப் பணித்துறையின் மூலம் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
    உடுமலை:

    உடுமலைபேட்டை வட்டம் அமராவதி அணையில் பொதுப் பணித்துறையின் மூலம் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய ஆயக்கட்டு கால்வாயிலும் கரூர் மாவட்டத்திற்கு பழைய ஆயக்கட்டு கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிட்டனர்.

    பின்னர் இது குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் விதமாக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மிக அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

    கரூர் மாவட்டத்திற்கு 3000 கன அடி அளவு தண்ணீர் செல்கிறது. சுமார் 11,500 கனஅடி அளவு தண்ணீர் கொண்டு செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளன.

    இதன் முக்கிய நோக்கம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், காங்கேயம், மக்களும் அரவக்குறிச்சி, கரூர் ஆகிபகுதிகளில் உள்ள கரையோர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே ஆகும்.

    அதே போல் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய ஆயக்கட்டு வாய்க்காலில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவு தண்ணீர் வழங்கப்படும். அணையில் தண்ணீர் இருப்பு நிலைக்கு ஏற்ப தொடர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து கரையோர பகுதிகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும.

    அணையிலிருந்து தண்ணீர் செல்லும் நாட்களில் யாரேனும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்தாலோ அல்லது லாரி மூலமாகவும், தனியார் நிறு வனங்கள் தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட்டால் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார் .

    நிகழ்ச்சியில் அமராவதி ஆறு பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தர்மலிங்கம், உடுமலைப் ஆர்.டி.ஓ. சாதனைக் குறள், அமராவதி ஆறு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் சரவணன், ரவிச்சந்திரன், திரு.சுப்புரமணியன், திரு. தர்மர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×