search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் ஆய்வு
    X

    திருவாரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் ஆய்வு

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் வட்டத்திற் குட்பட்ட அடியக்கமங்கலம் ஊராட்சியில் “பாரத ரத்னா” புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து வத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம், ரத்ததானம் முகாமினை கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழக அரசின் சார்பில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எதிர்வரும் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துவத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம், ரத்ததானம் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமானது பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகள் நலன், எலும்பு சிகிச்சை, மனநலம், பல் மருத்துவம், கண் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் உள்ள சிறந்த மருத்துவர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

    மேலும் இச்சிறப்பு மருத்துவ முகாமில் இ.சி.ஜி,கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் குறித்து ரத்தப் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகிறது. சித்த மருத்துவப் பிரிவின் கீழ் நிலவேம்பு குடிநீர் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இம்முகாமில் பரிசோதனை செய்யப்படுவதை கொண்டு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில் வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துவத்துறையின் துணை இயக்குநர் செந்தில் குமார், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் சின்னதுரை, மருந்தாளுனர் பைரவநாதன், தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×