search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் தொகுதியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் உதயகுமார் ஆய்வு
    X

    திருமங்கலம் தொகுதியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் உதயகுமார் ஆய்வு

    திருமங்கலம் தொகுதியில் ரூ. 7 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் தொகுதி நகர்பகுதியில் உள்ள மாம்பட்டி செல்வதற்காக ஆற்றுபாதையினை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக புதிய பாலம் அமைக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் ரூ. 95 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டு அதன் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோவில் செல்ல ரூ. 1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலத்தினையும் ஆய்வு செய்தார்.

    இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் மேலக்கோட்டை அணைகட்டிலிருந்து கம்பிக்குடி அணைக்கட்டு வரை தெற்காறு ஆற்றை புனரமைக்கும் பணி ரூ. 3 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் 12.50 கிலோமீட்டர் தூரம் கரையினை பலப்படுத்தி ஆற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிலையூர், நெடுமதுரை, தொட்டியப்பட்டி கண்மாய் ரூ. 1 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் செயலாளர் ஜெயராமன், துணைச்செயலாளர் அய்யப்பன், நகர செயலாளர் விஜயன். ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம் ராமசாமி, தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, நிர்வாகிகள் சிவன்காளை, ராஜா, பழனி மற்றும் பொதுப்பணிதுறை உதவி கோட்டபொறியாளர் லீலாவதி, கோட்ட பொறியாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×