search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
    X

    நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா ஆலோசனை கூட்டம் தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தீரன் சின்னமலை நினைவுநாள் குறித்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்தும் இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் நடப்பதுபோல் ஈரோடு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடக்கும்.

    தமிழ்நாட்டில் புரட்சி தலைவியின் அரசு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக நடந்து வருகிறது. நீட் தேர்வில் தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அமைச்சர்களும் டெல்லி சென்று மத்திய மந்திரிகளையும் பிரதமரையும் சந்தித்து வருகிறார்கள். இப்படி தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

    எனினும் எந்த தேர்வு வந்தாலும் அதை சந்திக்கும் வகையில் எதிர் கொள்ளும் வகையில் தமிழக மாணவர்களை தயார்படுத்தி வருகிறோம்.

    மலைப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதை பரிசீலித்து அந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. அணிகள் இணைய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    Next Story
    ×