search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த 25 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு
    X

    உயிரிழந்த 25 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

    பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம், கியூ பிரிவு குற்றபுலனாய்வுத் துறை, சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகர்; சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மணி; நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மணி.

    திருப்பூர் மாவட்டம், ஆயுத படை, மூன்றாம் படைப் பிரிவு, இரண்டாம் நிலைக் காவலர் ஈஸ்வரன்; ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன்; தூத்துக்குடி மாவட்டம், காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தங்க மகாராஜன்.

    திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தயாளன்; திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த பெருமாள்; உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சண்முகம்.

    ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தங்கராஜ்; சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஹரிஹர சுப்ரமணியன்.

    மதுரை மாநகர போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பன்னீர்பாண்டி மற்றும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முருகேசன்; திண்டுக்கல் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சரவண பெருமாள்.

    வேலூர் மாவட்டம், ஆயுதப்படை, 8-ம் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த தேவராஜன்; ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வெங்கடேசன்; கரூர் மாவட்டம், கியூ பிரிவு புலனாய்வுத் துறையில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சக்திவேல்; அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சக்கிரியாஸ்.

    வாலாஜாபாத் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர்; குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த குழந்தைவேலன்.

    நாகர்கோவில் ஆயுதப் படையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வேலாயுதம் மற்றும் தலைமைக் காவலர் கிருஷ்ணமோகன்; கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஈஸ்வரன்; துவாக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ராஜ்மோகன்; மதுக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சேரந்தையா பிள்ளை ஆகியோர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×