search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டீன்ஏஜ் பெண்கள் விரும்பும் பேஷன் மூக்குத்தி
    X

    டீன்ஏஜ் பெண்கள் விரும்பும் பேஷன் மூக்குத்தி

    மூக்குத்தி இன்றைய டீன்ஏஜ் பெண்களை அதிகம் கவர்ந்திருக்கிறது. சிறிய வளையம் போன்ற மூக்குத்தியையும் கல்லூரி மாணவிகள் விரும்புகிறார்கள்.
    டீன்ஏஜ் பெண்கள் பேஷனில் புத்தம் புது மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். மாற்றங்களே அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றன. ஆடைகளில் புதுமையை விரும்பிய அவர்கள் தற்போது ஆபரணங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கு அதிக பணத்தை செலவிட முன்வருவதில்லை. தங்களது வழக்கமான ‘பாக்கெட் மணி’யிலே பலவிதமான அணிகலன்களை வாங்கி தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.

    மூக்குத்தி இன்றைய டீன்ஏஜ் பெண்களை அதிகம் கவர்ந்திருக்கிறது. ஜீன்ஸ்- டாப்ஸ் அணிந்துகொள்ளும்போது அதற்கு பொருத்தமாக புதுவித மூக்குத்தியும் போட்டுக்கொள்கிறார்கள். அது கம்மலை போன்று பெரிதாக இருக்கும் பிளாக் மெட்டல் மூக்குத்தி. சிறிய கற்கள் அதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. எல்லாவிதமான உடைகளுக்கும் அது பொருந்துவதாக உள்ளது.

    சிறிய வளையம் போன்ற மூக்குத்தியையும் கல்லூரி மாணவிகள் விரும்புகிறார்கள். இந்தி நடிகைகள் அணிவது போன்ற பெரிய வளையமான மூக்குத்திக்கும் இளம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. பிளாக் மெட்டல் மூக்குத்திக்கு அடுத்த இடத்தை குந்தன் ஸ்டைல் மூக்குத்திகள் பிடித்திருக்கின்றன. பேன்சி மூக்குத்திகளில் பல நிற கற்கள் பொருத்துவது இப்போது பேஷனாக இருக்கிறது.



    மணல் போன்று வெளியே தெரியாத அளவில் மூக்குத்தி அணிந்த காலம் மாறி, இப்போது கார்ட்டூன் கதாபாத்திர வடிவங்களைக்கொண்ட பெரிய மூக்குத்திகள் அதிக வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கின்றன. பூக்கள், பறவைகள், பிராணிகள் வடிவங்களிலான மூக்குத்திகள் எல்லாம் இளம் பெண்களின் மூக்குகளுக்கு மேல் ஏறி உட்கார்ந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றன. வட்டம், சதுரம், முட்டை வடிவ மூக்குத்திகள் கல்லூரி மாணவிகளை அதிகம் கவர்கின்றன.

    மூக்கை குத்திக்கொள்ளாத பெண்களும் மூக்குத்தி அணிகிறார்கள். அவர்களுக்கு ‘பிரஷ்ஷிங் டைப்’ மூக்குத்திகள் கிடைக்கின்றன. தங்களை பலமானவர்களாக காட்டிக்கொள்ள இன்றைய இளம் பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு ஆபரணங்களும் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். அதற்காக அவர்கள் பெரிய மோதிரங்களை அணிகிறார்கள்.

    இப்போது பெண்கள் குவியல் குவியலாக பேஷன் ஸ்டோர்களை மொய்க்கிறார்கள், பெரிய மோதிரங்களை தேர்ந்தெடுப்பதற்காக! இரண்டு விரல்களுக்கு சேர்த்து ஒரே மோதிரத்தை அணிந்துகொள்ளவும் செய்கிறார்கள். ‘யாராவது வம்பு செய்தால் பலமாக குத்துவிட அது உதவும்’ என்கிறார்கள். பத்து விரல்களிலும் மோதிரங்கள் அணிந்துகொள்வதுகூட இப்போது ஒருவித பேஷனாக இருக்கிறது. ‘நெயில் ஆர்ட்’ செய்ய நேரமில்லாதவர்கள் நெயில் ஆர்ட் இணைப்புகளை பயன்படுத்துகிறார்கள்.



    கம்மல்களும் பெரிதாக இருக்கவேண்டும் என்றே இன்றைய இளந்தலைமுறை பெண்கள் விரும்புகிறார்கள். இப்போது வளையல்களும் புதிய வடிவம் பெற்றிருக்கின்றன. பலவகை பிரெஸ்லெட்களை அணிந்து, கைகளை வீசி அழகு நடை நடந்து வந்த பெண்கள் இன்று விதவிதமான வளையல்களை அணிந்து அழகு பார்க்கிறார்கள். ஜீன்ஸ், குர்தா, லாங்க் ஸ்கர்ட்டுகளுக்கும் பொருத்தமாக வளையல்கள் அணிகிறார்கள்.

    கறுப்பு நிறத்திலான உடைகளை அணியும்போது பெண்கள் சில்வர், த்ரெட், நியூட்ரல் நிறங்களிலான அணி கலன்களை அணிவது பொருத்தமாக இருக்கும். பலவண்ணத்திலான உடைகளை அணியும்போது, அணிகலன்கள் விஷயத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். அழகான அணிகலன்கூட, அந்த மாதிரியான உடையோடு கலந்திடும்போது எடுபடாமல் போய்விடும். அதனால் அணிகலன்கள் எடுபடவேண்டும் என்று விரும்பும் பெண்கள், மூன்று நிறங்களுக்கு மேல் இடம்பெறும் உடைகளை தவிர்ப்பது நல்லது.

    எம்ப்ராய்டரிங், பிரிண்டட் உடைகளை உடுத்தும்போது கழுத்து, காது ஆபரணங்கள் சிம்பிளாக இருக்கவேண்டும். மொத்தமாக அழகைகூட்டும் விதத்தில் ஆடையும், ஆபரணங்களும் அமைந்திருக்கவேண்டும். ஜீன்ஸ்- டாப்ஸ் பயன்படுத்தும்போது சில்வர், ஆன்டிக் ஆபரணங்கள் தூக்கலாக இருக்கும்.
    Next Story
    ×