search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக்
    X

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக்

    கேக்கில் பல்வேறு வகைகள் உள்ளன. இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் 

    மைதா - 175 கிராம்
    கோகோ பவுடர் - 50 கிராம்
    முட்டை - 3
    பால் - 3 டேபிள்ஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
    வெண்ணெய் - 100 கிராம்
    ஐஸிங் சர்க்கரை - 300 கிராம்
    சூடான தண்ணீர் -  6 டேபிள்ஸ்பூன்
    உப்பு - கால் டீஸ்பூன்
    பட்டர் பேப்பர் - 2

    சாக்லேட் பட்டர் க்ரீம் தேவையான பொருட்கள்

    வெண்ணெய் - 40 கிராம்
    ஐஸிங் சர்க்கரை - ஒன்றரை கப்
    உப்பு - ஒரு சிட்டிகை
    பால் - 2 டேபிள்ஸ்பூன்
    வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    வெண்ணெய், சர்க்கரை, உப்பு, வெனிலா எசன்ஸை ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து, மிருதுவாக நுரை பொங்கி வரும் வரை நன்கு அடித்து அதனுடன் பாலையும் சேர்த்து, நன்றாக கலந்து வைக்கவும்.

    மைக்ரோவேவ் ஓவன் 180 டிகிரியில் 20 நிமிடங்கள் பிரீஹீட் செய்யவும். 

    9 இன்ச் கேக் பேனில் உள்ளே பட்டர் பேப்பர் விரித்து வைக்கவும். 

    மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர், உப்பு மூன்றையும் கலந்து ஒன்றாக சலித்துக்கொள்ளவும். 

    ஒரு பவுலில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து மிருதுவாக நுரை பொங்கி வரும் வரை முட்டை அடிக்கும் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கவும். 

    இத்துடன் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்துச் சேர்த்து அடிக்கவும். 

    பிறகு, மைதா, பால் என ஒன்றன் பின் ஒன்றாக சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவாக கட்டி விழாமல் கலக்கவும். 

    இதை கேக் மோல்டில் ஊற்றி மோல்டை அவனில் வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் 180 டிகிரியில் பேக் செய்யவும்.

    கேக் ஆறியவுடன் அதன் மேல் கிரீமை அலங்கரித்து பரிமாறவும். 

    சூப்பரான சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×