search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய்
    X

    சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய்

    சிறுவயதிலே நாம் ரசித்து ருசித்த பல தின்பண்டங்களில் மறக்க முடியாத ஒரு தின்பண்டம் தான் இந்த தேன் மிட்டாய். இன்று இதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    புழுங்கல் அரிசி - 4 கப்
    முழு உளுந்து - ஒரு கப்
    சர்க்கரை - 4 கப்
    தண்ணீர் - ஒரு கப்
    ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் - சிறிதளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு



    செய்முறை :

    அரிசி மற்றும் உளுந்தை நன்றாக கழுவி 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும்.

    அரிசி, உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு குறைவான தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்தில் கட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஆரஞ்சு கலர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதிக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவை சிறிது சிறிதாக கிள்ளி எண்ணெயில் போடவும். (போண்டாவுக்கு எடுப்பது போல் ஆனால் நெல்லிக்காய் அளவு மாவை எடுக்க வேண்டும்)

    உருண்டைகள் நன்றாக வெந்து மேலே வரும்.

    பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும்.

    ஊறியதும் தேன் மிட்டாயை எடுத்து சர்க்கரையில் பிரட்டி வேறு தட்டிற்கு மாற்றவும். ஆறியதும் சுவைக்கவும்.

    சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய் ரெடி.

    கலர் பிடிக்காதவர்கள் சேர்க்க தேவையில்லை.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×