search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மும்பை ஸ்பெஷல் சந்தேஷ் செய்வது எப்படி
    X

    மும்பை ஸ்பெஷல் சந்தேஷ் செய்வது எப்படி

    மும்பையில் சந்தேஷ் மிகவும் பிரபலமான இனிப்பு. இந்த இனிப்பை செய்வது மிகவும் எளிமையானது. இன்று இதன் செய்முறை விளக்கதை விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முழு க்ரீம் உள்ள பால் - 1 லிட்டர்,
    எலுமிச்சைப் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
    தூளாக்கிய சர்க்கரை - 1/8 கப்,
    பிஸ்தா, பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்,
    குங்குமப்பூ - சிறிதளவு.   

    செய்முறை :

    பாலை கொதிக்க வைத்து அதில் எலுமிச்சைச்சாறை கலக்கவும். பால் திரித்து தண்ணீர் தனியே நிற்கும். அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறவும். தண்ணீர் பிரிந்து தனியே வரும் வரை கிளறவும். இந்தப் பன்னீரை மஸ்லீன் துணியில் கட்டி 30 நிமிடங்கள் தொங்கவிடவும். அப்போது மீதமுள்ள தண்ணீரும் வெளியேறி விடும். இந்த பன்னீரை எடுத்து எலுமிச்சையின் புளிப்பு தன்மை போகும் வரை தண்ணீரில் சுத்தம் செய்யவும். தண்ணீர் இருந்தால் பிழிந்து எடுத்து விடவும்.

    பிறகு பன்னீருடன் தூளாக்கிய சர்க்கரை சேர்த்து மிருதுவான விழுதாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு நான்ஸ்டிக் தவாவில் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    முதலில் விரல்களில் ஒட்டிக் கொண்டு வரும். பிறகு ஒட்டாததாக மாறிவிடும். ஒட்டாத பதத்துக்கு வந்ததும் குங்குமப்பூ சேர்த்து கலந்து வைக்கவும். இந்த குங்குமப்பூ ஒட்டாத பதத்துக்கு வந்ததும் அதன் நிறம் மாறும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

    இது மிதமான சூட்டில் இருக்கும் போது தட்டையாக கைகளால் தட்டி, மேலே பிஸ்தா, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    சந்தேஷ் ரெடி.
    Next Story
    ×