search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மட்டன் மிளகாய் சுக்கா வறுவல்
    X

    மட்டன் மிளகாய் சுக்கா வறுவல்

    சம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இந்த மட்டன் மிளகாய் சுக்கா வறுவல் சூப்பராக இருக்கும். இன்று மட்டன் மிளகாய் சுக்கா வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி அல்லது தேவைக்கு
    மஞ்சள்தூள் - 1 மேசைக்க்ரண்டி
    எண்ணெய் - 3/4 கோப்பை
    ப.மிளகாய் - 4
    கொத்தல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    * கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கழுவி மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவி எடுக்கவும்.

    * குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடி 7 விசில் போட்டு இறக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது.

    * வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் ப.மிளகாயை போட்டு தாளித்த பின்னர் வேக வைத்த மட்டனை போட்டு நன்கு வறுத்தெடுக்கவும்.

    * துண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்வரை வறுக்க வேண்டும். நன்றாக வெந்து உதிரியாக வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சூப்பரான மட்டன் மிளகாய் சுக்கா வறுவல் ரெடி.

    குறிப்பு:

    இளங்கறியாக இருந்தால் அரை வேக்காடு போதும். காரம் அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சற்றுத் தாரளமாக இருப்பதுதான் சுக்காவுக்கே சுவை. கரம் மசாலா தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×