search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு சத்தான கோதுமை மாவு களி
    X

    உடலுக்கு சத்தான கோதுமை மாவு களி

    சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் தினமும் உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமையில் களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    உப்பு - சிறிது,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் - 3 கப்.

    செய்முறை :

    அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.

    கோதுமை மாவினை 1/2 கப் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றவும்.

    கைவிடாமல் நன்றாக கிளறவும். அப்போது தான் கட்டியில்லாமல் அடி பிடிக்காமல் இருக்கும். நன்றாக வேக விடவும். கையில்  தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.

    சின்ன வெங்காயம், கருவாட்டு குழம்பு, சாம்பார், பொரியல், குழம்பு, தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.

    கோதுமை ரவையிலும் இந்த களியை செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×