search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ‘ஆல்பா லினோலினிக்’ எனும் அற்புதம்
    X

    ‘ஆல்பா லினோலினிக்’ எனும் அற்புதம்

    முதல் முறையாக மாரடைப்பு வந்தவர்களுக்கு, மறுமுறை வராமல் தடுக்க, ஊட்டச்சத்து மருந்தாக ஆல்பா லினோலினிக்கை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
    ஆல்பா லினோலினிக் அமிலம் என்பது மிக முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகும். நமது உடல் வளர்ச்சிக்கும் உறுப்புகளைப் பராமரிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பதால் அவசியமான கொழுப்பு அமிலமாக இது கருதப்படுகிறது. முதல் முறையாக மாரடைப்பு வந்தவர்களுக்கு, மறுமுறை வராமல் தடுக்க, ஊட்டச்சத்து மருந்தாக இதை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது ரத்தச்சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதால், மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஆல்பா லினோலினிக் அமிலத்தின் பயன்கள் ஏராளம். இது இதயத்தின் ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புக்கட்டிகளைக் கரைக்கப் பயன்படுகிறது. கொலஸ்ட்ரால் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கிறது. ‘ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்‘ எனும் மூட்டுவலியைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

    மேலும் சர்க்கரை நோய், சிகிளரோசிஸ் எனும் நரம்பு நோய், சிறுநீரக நோய் போன்றவற்றையும் குணமாக்குகிறது. நுரையீரல் நோய், சருமப் புற்றுநோய், சொரியாசிஸ், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி போன்றவற்றையும் குணப்படுத்த பயன்படுகிறது. இது ஆண்களுக்கு விரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது.



    ஆல்பா லினோலினிக் அமிலக் குறைவாக இருந்தால் இதயநோய் பாதிக்கும் ஆபத்து அதிகரிக்கும். முதல்முறை ஹார்ட் அட்டாக் வந்ததுமே ஆல்பா லினோலிக் அமிலக் குறைபாடு இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். இல்லாவிட்டால் மறுமுறை அட்டாக் சீக்கிரமே வந்து விடும்.

    ஆல்பா லினோலினிக் அமிலம், அக்ரூட், சியா போன்ற கொட்டை வகைகள், மீன் எண்ணெய், வெஜிடபிள், சோயாபீன்ஸ் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், கனோலா, ஆளிவிதை எண்ணெய். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, ஈஸ்ட் போன்ற உணவு வகைகளில் அதிகமாக உள்ளது.

    ஒரு நாளைக்கு 2,000 கிலோ கலோரிகள் உணவு சாப்பிடுகிறோம் என்றால், அதில் இரண்டு கிராம் ஆல்பா லினோலினிக் அமிலம் இருக்க வேண்டும் அப்போதுதான் நமக்கு ஆரோக்கியம் கிட்டும்.
    Next Story
    ×