search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உயர் ரத்த அழுத்ததால் உடலில் ஏற்படும் பாதிப்பு
    X

    உயர் ரத்த அழுத்ததால் உடலில் ஏற்படும் பாதிப்பு

    உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கடைப்பிடிக்காவிட்டால், இதயம், சிறுநீரகம் போன்றவை செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.

    * உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதுபோல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் உணவை பதப்படுத்துவதற்காக உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றில் சிலவகை ரசாயன கலவைகளும் இடம் பெற்றிருக்கும்.

    * ஊறுகாயை அடிக்கடி உணவில் சேர்த்து ருசிப்பது தவறு. அதிலும் உப்பு அதிகம் சேர்ந்திருக்கும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் குறைந்த அளவு சேர்த்துக்கொள்ளலாம். சிறுவயதிலேயே ஊறுகாயை உணவில் சேர்த்து சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக அதனை தவிர்ப்பது அவசியம்.

    * உப்பு கலந்த திண்பண்டங்களை தவிர்ப்பதும் நல்லது. அதில் கலந்திருக்கும் உப்பு தாகத்தை அதிகப்படுத்தும். அதன் தாக்கம் ரத்த குழாய்களை பாதிக்கும்.

    * சூப் வகைகளை தயாரித்ததும் குடிக்க வேண்டும். அவை பதப்படுத்தப்பட்டிருந்தால் அத்தகைய சூப்புகளை குடிக்காமல் இருப்பதே நல்லது. அதிலும் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும்.

    * மது குடிப்பதும் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். அதிலுள்ள ஆல்கஹால் ரத்த குழாய்களை வெகுவாக பாதிக்கும். அதுபோல் மது அருந்தும்போது துரித உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. அவையும் உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு வழிகோலும்.

    * கேக்குகள், குக்கீஸ்களில் சுவைக்காக உப்பு மற்றும் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளையும் ரத்த அழுத்த பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தவிர்ப்பது நல்லது.
    Next Story
    ×