search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை சொல்லலாம்
    X

    ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை சொல்லலாம்

    உடலில் உள்ள ஒரு ஸ்டெம் செல் போதும். ஆண்மையில்லை, விந்தணு இல்லை எனும் ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை சொல்லிவிடலாம்.
    உடலில் உள்ள ஒரு ஸ்டெம் செல் போதும். உங்களுக்குச் சொந்தமான ஒரு விந்தணுவை உருவாக்கி விடலாம் என்பது தான் ஆராய்ச்சி சொல்லும் ஆச்சரிய சங்கதி. பிரிட்டனின் நியூகாசில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகின் புருவத்தை உயர வைத்திருப்பவர் பேராசிரியர் கரிம் நயிர்னியா.

    இன்றைய தேதியில் 6 தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது. குளோபல் வார்மிங், ஆபீஸ் டென்ஷன், பீட்சா, பர்கர், சீஸ் என கொழுப்பு உணவுகள், நோ எக்சர்சைஸ், மன அழுத்தம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்கள் இதைச் சுற்றி இருக்கிறது. அதனால் இப்போதெல்லாம் ரேஷன் கடை வாசலில் நீளும் கூட்டத்தை விட அதிகமாய் கைனோகாலஜிஸ்ட்களின் வாசலில் கூட்டம் நீள்கிறது என்பது தான் நிஜம்.

    உண்மையில், பிரச்சினை பெரும்பாலும் ஆண்களிடம் தான். ஜீவனில்லா விந்தணு, வீரியமில்லா விந்தணு, மூவ்மெண்ட் குறைவான விந்தணு, குறைவான எண்ணிக்கை இப்படி எக்கச்சக்கமான பிரச்சினைகள் இந்த உயிரணுவைச் சுற்றி. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகக் கூடும் இந்த ஆராய்ச்சி என்பதே இப்போதைக்கு மருத்துவ உலகின் நம்பிக்கை.

    உலக மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக எனும் அடைமொழியுடன், ஒரு ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்தெடுத்து, அதை சோதனைக்கூடத்தில் ஸ்பெர்ம் ஆக வளரச் செய்திருக்கிறார் பேராசிரியர் கரிம் நயிர்னியா. கருவிலிருந்து தான் செல்லை எடுக்க வேண்டுமென்றில்லை, ஆண்களின் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லைப் பிரித்து எடுத்து ஒரு ஸ்பெர்ம் செல்லை உருவாக்க முடியும் என நம்புகிறார் அவர்.

    எளிதாய் சொன்னாலும் இதன் பின்னணியில் உள்ள உழைப்பு அசாத்தியமானது. ஸ்டெம் செல் ஒன்றை திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி, அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டு வந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகிறதாம். இந்த விந்தணுவை ஐ.வி.எப். முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயார். ஆண்மையில்லை, விந்தணு இல்லை எனும் ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். இதுவொரு வரப்பிரசாதம்.
    Next Story
    ×