search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?
    X

    சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?

    சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது சரிதானா என்றால், ‘இல்லை’ என்றே மருத்துவ தரப்பில் பதில் வருகிறது. இதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.
    சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது பலருக்கும் வழக்கமான பழக்கமாக இருக்கிறது. ஆனால் அது சரிதானா என்றால், ‘இல்லை’ என்றே மருத்துவ தரப்பில் பதில் வருகிறது.

    நாம் உண்ணும் உணவைச் செரிப்பதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்களையும் அமிலங்களையும் சுரக்கின்றன. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் அவை நீர்த்துப் போகும். செரிமானம் பாதிக்கும்.

    எனவே, உணவு உட்கொண்ட பின் 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    அதிலும், வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவதால் உணவு எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை தடுக்கிறது. இளஞ்சூடாய் தண்ணீர் பருகுவது, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது என்றுகூட தெரிவிக்கப்படுகிறது.



    சிலருக்கு ‘ஜில்’லென்று பிரிட்ஜில் வைத்த தண்ணீர்தான் குடிக்கப் பிடிக்கும். ஆனால், குளிர்ந்த நீர் அருந்துவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும்.

    சாப்பிட்டு முடித்தபின்னர் ‘ஜில்’லென்று தண்ணீர் அருந்தினால், நம் உணவில் உள்ள எண்ணெய்த் துகள்கள் கெட்டியாகிவிடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை ஏற்படும். அதோடு, நமது உடலில் சேரும் கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

    மேலும், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது, எனவே வெதுவெதுப்பான தண்ணீரையே குடியுங்கள்.
    Next Story
    ×