search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் ஆயில் மசாஜ் செய்யலாம்?
    X

    குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் ஆயில் மசாஜ் செய்யலாம்?

    குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.
    குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.

    தினமும் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவது குழந்தைக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவால் வேறு சில நன்மைகளும் உண்டு.

    உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பற்கள் வளரும்போது வலி அதிகமாகாமல் இருத்தல் என பல நன்மைகள் உண்டு. குழந்தைக்கு ஆரம்ப காலத்திலேயே மசாஜ் செய்து வந்தால், மஞ்சள் காமாலை வராமல் தடுக்க முடியும்.

    தூங்கி எழுந்தவுடன் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வது கூடாது. குழந்தை விழித்திருக்கும் போது, நன்கு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.

    மசாஜ் செய்வதை குழந்தைகள் அனுபவிக்க ஆரம்பித்துவிடும். ஒருவேளை மசாஜ் செய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தை அழ ஆரம்பித்தால் அதற்கு மசாஜ் செய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
    Next Story
    ×