search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமணக்கோலத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    திருமணக்கோலத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    பழனி முருகன் கோவிலில் சண்முகர், வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம்

    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்களின் சரண கோஷம் முழங்க சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி விழா கடந்த 20-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலையில் மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு யாகமும், பிரதான கலசம் வைத்து ஹோமமும், சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தது.


    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    இதைத்தொடர்ந்து பக்தர்களின் ‘அரோகரா’ என சரண கோஷம் முழங்க காலை 10.45 மணிக்கு திருமாங்கல்யத்தை தெய்வானை, வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை குருக்கள்கள் நடத்தி வைத்தனர். பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவிலில் வலம் வந்து சண்முகர் சன்னதியில் எழுந்தருளினார். பின்னர் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு திருமண விருந்து நடைபெற்றது. விருந்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.

    பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 7.15 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு முத்துக்குமார சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், வள்ளி-தெய்வானை சப்பரத்தில் மணக்கோலத்திலும் எழுந்தருளி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×