search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும் அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.
    X
    கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும் அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    நாகை மாவட்டம், பொறையாறு கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம், பொறையாறில் 500 ஆண்டுகள் பழமையான பெருமாள்கோவில் என்ற கோதண்டராமசாமி கோவில் உள்ளது. இங்கு கோதண்டராமசாமி, சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகிய சாமிகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் 140 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து விழாக்குழுவை அமைத்தனர். இதைத்தொடர்ந்து திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

    திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 7-ந் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 8-ந் தேதி நித்யபூஜை, யாகசாலை பிரவேசம், திருமஞ்சணம், 2-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. நேற்று முன்தினம் நித்யபூஜை மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது.

    நேற்று காலை 6 மணிக்கு நித்யபூஜை, மகா பூர்ணாகுதி மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மேள-தாளத்துடன் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. காலை 7.20 மணிக்கு பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்றபோது கோவில் கோபுரத்தை சுற்றி கருடன் வட்டமிட்டது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
    Next Story
    ×