search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரமடை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா: 150 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை
    X

    காரமடை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா: 150 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி காரமடை பகுதிகளில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
    காரமடை நகரம் மற்றும் காரமடை கிழக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    விழாவை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி காரமடை மற்றும் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    27-ந் தேதி மாலை 5 மணிக்கு கன்னார் பாளை யம் வீர சிவாஜி திடலுக்கு அனைத்து விநாயகர் சிலைகளும் கொண்டு வரப்பட்டு பொதுக் கூட்டம் நடக் கிறது. காரமடை நகர இந்து முன்னணி பொதுச் செய லாளர் கே.ருரு தேவன் கடவுள் வாழ்த்து பாடுகிறார்.

    கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் காரமடை கே.டி.சிவப்புகழ் தலைமை தாங்கி பேசுகிறார். நகர தலைவர் என்.குமார் வரவேற்று பேசுகிறார்.

    இந்து முன்னணி மாநில துணை தலைவர் , மாநில பேச்சாளர் காரமடை என்.மனோகரன் ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். அருள் முருகன் அடிகளார், சுரேஷ் சுவாமி அடிகளார், கே.வி. அச்சுதன் குட்டி ஆகியோர் ஆசியுரை வழங் குகின்றனர்.

    சமுதாய சேவா சங்க கோவை மண்டல துணை தலைவர் ஆர்.வெள் ளியங்கிரி , ஒக்கலியர் மகா ஜன சங்கம் எம்.கே.கே. மோகன், பா.ஜனதா மாவட்ட பொதுச்செய லாளர் வி.பி.ஜெக நாதன் ஆகி யோர் வாழ்த்தி பேசு கின்றனர்.

    இதையடுத்து அனைத்து சிலைகளும் விசர்ஜன ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தை தொழில் அதிபர் எம்.எம்.ராமசாமி உள்பட பலர் தொடங்கி வைக்கின்றனர். கிழக்கு ஒன்றிய தலைவர் ஆர்.ரவி பாரதி நன்றி கூறுகிறார்.

    இத்தகவலை மாவட்ட தலைவர் கே.டி.சி. சிவப்புகழ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×