search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று தொடங்குகிறது
    X

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று தொடங்குகிறது

    தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிமாத கொடை விழா இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு ஆடிமாத கொடை விழா இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கும் காலை 8.30 மணிக்கும் சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கும், இரவு 7 மணி மற்றும் 9 மணிக்கும் சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு கும்பம் தெரு வீதி உலா வருதல் நடக்கிறது. தொடர்ந்து மகுட ஆட்டம், குறவன்- குறத்தி ஆட்டம் போன்ற பல்வேறு கலைநிகழச்சிகள் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு மகுட இசையும், 10 மணிக்கு வில்லிசையும் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு கும்பம் தெரு வீதி உலா வருதல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனையுடன் கொடை விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×