search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு அபிஷேகம்

    தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு ஆடிப்பூரத்தையொட்டி அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
    மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பெரியகோவிலில் உள்ள 108 சிவலிங்கங்கள், முருகன், வருணபகவான் உள்பட 456 சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பெரியகோவில் வளாகத்தில் உள்ள வராகிஅம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் அம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ர காளியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சிலர் வளையல்களை வழங்கினர்.

    அதேபோல் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன் கோவில், தஞ்சையை அடுத்த வல்லம் ஏகவுரியம்மன்கோவில், மானம்புச்சாவடி பிள்ளையார்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
    Next Story
    ×