search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது
    X

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெறவுள்ளது.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெறவுள்ளது. திருவிழா நடத்துவது குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன் தலைமை தாங்கினார். கோவிலில் திருப்பணிகள் நடைபெறும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

    ஆகம வல்லுனர்களின் கருத்துப்படி கோவிலில் வழக்கமான நிகழ்வுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் கம்பம் நடுதல், திருமாங்கல்யம் செலுத்துதல், அம்மன் திருவீதி உலா, உருளுதண்டம் மற்றும் சத்தாபரண புறப்பாடுகள் ஏதும் நடத்திக் கொள்ளாமல், ஆக வல்லுனர் கருத்துப்படி பாலாலய சாமிக்கு ஆராதனைகள் நடத்தி கொள்ளவும், விழாவில் பாலாலய, உற்சவ அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து கொள்ளலாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



    மேலும் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கொண்டு இருப்பதாலும், மூலவர் அம்மனுக்கு பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதாலும் ஆடிப்பெருந்திருவிழா என்பதை ஆடித்திருவிழா என மாற்றம் செய்யப்பட்டு பாலாலய அம்மனுக்கு திருவிழா நடத்தலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர் மாலா, திருவிழா ஆலோசனை குழு உறுப்பினர்கள் யாதவமூர்த்தி, சதீஸ்குமார், பாலசுப்ரமணி, நெத்திமேடு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆடித்திருவிழாவின் முக்கிய திருவிழாவாக வருகிற 25-ந் தேதி பூச்சாட்டுதல், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி சக்தி அழைப்பு, 9, 10, 11-ந் தேதிகளில் பொங்கல் பிரார்த்தனை செய்தல், 15-ந் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறவுள்ளது.
    Next Story
    ×