search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை நீக்கும் கௌமாரி வழிபாடு
    X

    திருமண தடை நீக்கும் கௌமாரி வழிபாடு

    திருமண தடை நீக்கி புத்திரப் பேற்றினை தட்டாமல் தரும் முருகனின் சக்தியான கௌமாரியை நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று வணங்குபவர் வாழ்வில் வளம் சேர்ப்பாள்.
    நவராத்திரியின் ஆறாம் நாளான சஷ்டியில் இன்று சக்தி தேவியை கௌமாரி தேவியாக வழிபட வேண்டும். மயில் வாகனமும், சேவல்கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்; ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

    வீரத்தை தருபவள். கல் யானை வடிவத்தை எடுப்பவள். பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம் ஆகியவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களை தட்டாமல் நிறைவேற்றுபவள். இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள்.

    வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களோடு அபயமும், வரதமும் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரம் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூல் இந்த அன்னையைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

    காலத்தின் வடிவை ஸ்தூலமாய் உருவகப்படுத்தினால் 60 வருடங்களையும் அறுபது படிகளாகக் கொண்டு அதன் மேல் கோலோச்சும் சுவாமிநாதன் 60 வருடங்களாகிய காலத்தின் ஸ்தூல ரூபம். காலத்தை ஒரு வருடத்தின் உருவமாகக் கொண்டால் முருகனின் இரு கால்கள் தட்சிணாயனம், உத்ராயணம் ஆகிறது.

    ஆறு ருதுக்களும் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களே பன்னிரண்டு மாதங்களாகும். அதேகாலம் ஒரு நாளாய் உருவம் கொண்டால் இரவு, பகல் என்றாகிறது. அதுவே முருகனின் வடிவமாய் எடுத்துக்கொண்டால் இரவு வள்ளி, பகல் தேவஸேனை. இந்த இரண்டு கௌமார சக்திகளும் இணைந்த ஒருவரே முருகனின் ரூபம்.

    முருகனை காலரூபமாகவும், காலத்தை தன் வசத்தில் வைத்திருப்பவனாகவும் பேசுகிறது கந்தபுராணம். மகிமை வாய்ந்த, திருமண தடை நீக்கி புத்திரப் பேற்றினை தட்டாமல் தரும் சகல வல்லமை பொருந்திய முருகனின் சக்தியான கௌமாரி, தன்னை வணங்குபவர் வாழ்வில் வளம் சேர்ப்பாள்
    Next Story
    ×