search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினி முதலமைச்சர், கமல் துணை முதல்வர்: எஸ்.வி.சேகர் யோசனை
    X

    ரஜினி முதலமைச்சர், கமல் துணை முதல்வர்: எஸ்.வி.சேகர் யோசனை

    ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி அவர் முதல்-அமைச்சர் பொறுப்பையும், கமல்ஹாசன் துணை முதல்-அமைச்சர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் யோசனை தெரிவித்துள்ளார்.
    தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:-

    “ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும். அவர் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம். கமல்ஹாசன் துணை முதல்-அமைச்சராக இருக்கலாம்.

    அஜித்குமார், விஜய்யையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம். சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லப்படும் சூழ்நிலையில், சினிமா நடிகர்களாலும் சிறப்பான ஆட்சியை தரமுடியும் என்று சொல்லி சரியான கொள்கைகளை விளக்கி அரசியல் கட்சியை அவர்கள் நடத்தட்டும்.

    யார் அரசியலுக்கு வரவேண்டும். யார் வரக்கூடாது என்று தீர்மானிக்க கூடியவர்கள் ஓட்டுப்போடும் மக்கள்தானே தவிர, மந்திரிகளோ, மாவட்ட செயலாளர்களோ கிடையாது”.

    இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.
    Next Story
    ×