search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பஜாஜ் ஆட்டோ விற்பனை 23% குறைந்தது
    X

    பஜாஜ் ஆட்டோ விற்பனை 23% குறைந்தது

    இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் விற்பனை 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி: 

    இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ விற்பனை முந்தைய காலாண்டுகளை விட 23 சதவிகிதம் குறைந்துள்ளது. இத்தகவல் அந்நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்த பி.எஸ்.இ. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் பஜாஜ் ஆட்டோ ஜூன் மாதத்தில் மொத்தம் 2,44,878 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ 3,16,969 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. 

    பஜாஜ் ஆட்டோ விற்பனை சுமார் 25 சதவிகிதம் குறைந்துள்ளது. இத்துடன் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 4 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,17,903 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு  இதே காலகட்டத்தில் 1,23,252 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது. வணிக ரீதியாக பஜாஜ் ஆட்டோ விற்பனை ஜூன் மாதத்தில் மட்டும் 40,211 யுனிட்கள் குறைந்துள்ளது.

    முன்னதாக ஹோண்டா நிறுவன விற்பனை ஜூன் மாத நிலவரப்படி லாபகரமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 444,713 வாகனங்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 சதவிகிதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் ஹோண்டா நிறுவனம் 427,222 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
    Next Story
    ×