search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்த ஆண்டின் சிறந்த கார் விருது பெற்ற ஹூன்டாய் வெர்னா
    X

    இந்த ஆண்டின் சிறந்த கார் விருது பெற்ற ஹூன்டாய் வெர்னா

    ஹூன்டாய் மோட்டார் இந்தியாவின் அடுத்த தலைமுறை வெர்னா மாடல் இந்த ஆண்டின் சிறந்த கார் என்ற விருதை வென்றுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூன்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலுக்கு 2018 சிறந்த கார் விருதை வென்றுள்ளது. இதுவரை ஹூன்டாய் நிறுவனம் ஐந்து ICOTY விருதுகளை தனது: வெர்னா, கிரெட்டா, எலைட் i20, கிரான்ட் i10 மற்றும் i10 உள்ளிட்ட மாடல்களுக்காக முறையே 2018, 2016, 2015, 2014 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் வென்றுள்ளது.

    அடுத்த தலைமுறை வெர்னா மாடல் ICOTY 2018 நிகழ்வில் பிரபல ஆட்டோமேட்டிவ் பிரசுரங்களை சேர்ந்த 18 பேர் அடங்கிய நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த கார் விருதை ஜெ.கே. டையர் மற்றும் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் ரகுபதி சிங்கேனியா ஹூன்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான வை.கே. கூவிடம் வழங்கினார்.

    இந்த ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் அடுத்த தலைமுறை ஹூன்டாய் வெர்னா அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக புதிய ஹூன்டாய் வெர்னா இருக்கிறது. அறிமுகமான முதல் மாதத்திலேயே 7000க்கும் அதிகமானோர் புதிய வெர்னா வாங்க முன்பதிவு செய்திருந்தனர்.



    புதிய வெர்னா மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 123bhp, 151NM டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் மாடலும் வழங்கப்படுகிறது. டீசல் இன்ஜின் 128bhp, 260NM செயல்திறன் கொண்டுள்ளது. அறிமுகம் செய்யப்படும் போது இரண்டு வித இன்ஜின் மாடல்கள் மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் முந்தைய மாடல்களை விட அதிக மைலேஜ் தரும் படி ARAI மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.7 கிலோமீட்டர், பெட்ரோல் ஆட்டோமேடிக் 15.92 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 24.75 கிலோமீட்டர், டீசல் ஆட்டோமேடிக் லிட்டருக்கு 21.02 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.  

    புத்தம் புதிய வெர்னா முந்தைய மாடல்களை விட 65 மில்லிமீட்டர் நீளமாகவும், 29 மில்லிமீட்டர் அகலமும், வீல்பேஸ் 30 மில்லிமீட்டர் அளவு நீளமாக இருக்கிறது. தற்சமயம் 4,440 மில்லிமீட்டர் நீளமும், 1,729 மில்லிமீட்டர் அகலமும், 2,600 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. இதன் பின்பக்க ஹெட்ரூம் 3 மில்லிமீட்டர் 948 மில்லிமீட்டர் அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பூட்ஸ்பேஸ் மற்றும் ஃபியூயல் டேன்க் முறையே 20 லிட்டர் மற்ரும் 2 லிட்டர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதிய ஹூன்டாய் வெர்னா 2017 ஹோன்டா சிட்டி, மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    Next Story
    ×